"இவன்தான் அந்த சார்.." என்ற போஸ்டருடன் சட்டப்பேரவை வளாகத்தில் திமுக எம்எல்ஏக்கள் கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அண்ணா பல்கலை. மாணவி வன்கொடுமை வழக்கில் யார் அந்த சார் என்ற கேள்வியை அதிமுக எழுப்பியது. இந்நிலையில், அண்ணா நகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான அதிமுக பிரமுகர் சுதாகரின் புகைப்படத்துடன் கூடிய "இவன்தான் அந்த சார்.." என்ற போஸ்டருடன் திமுக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவைக்கு வருகை தந்தனர்.