அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் திருவிளக்கு பூஜை

58பார்த்தது
*ஆடி வெள்ளியை முன்னிட்டு குத்து விளக்கு பூஜை ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்* திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள ஆதிரெங்கத்தில் அமைந்துள்ளது அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயம் சுற்றுப்புற கிராமங்களுக்கு காவல் தெய்வம் விளங்கும் அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் ஆடி வெள்ளியை முன்னிட்டு குத்து விளக்கு பூஜை நடைபெற்றது கோயில் எதிரே உள்ள மண்டபத்திலும் அமைக்கப்பட்டு இருந்த அரங்கத்திலும் 300-க்கும் மேற்பட்ட பெண்கள் குத்துவிளக்கு பூஜையில் கலந்து கொண்டனர் குத்து விளக்கிற்கு மஞ்சள் குங்குமம் இட்டு ரவிக்கை பழங்கள் சமர்ப்பிக்கப்பட்டு மலர்களால் பூஜை செய்தனர் குடும்ப ஒற்றுமை குடும்ப உறுப்பினர்களுக்கு எந்த வியாதிகளும் இன்றி நீண்ட ஆயுள் பெறவும். உலக நன்மைக்காகவும். குழந்தை பாக்கியம் வேண்டியும். விவசாயம் செழித்து விடவும் இந்த குத்து விளக்கு பூஜை நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி