உலகத் தாய்மொழி நாளினை முன்னிட்டு மன்னார்குடி தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தினர் தூய தமிழ்ப் பெயர் கொண்ட அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கி கவுரவித்தனர்.
மன்னார்குடி கோபாலசமுத்திரம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவிற்கு கலை இலக்கியப் பெருமன்றத்தின் தலைவர் செல்வகுமார் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் நீடா சந்திரசேகர், மாவட்ட நிர்வாகிகள் கலியபெருமாள், கலைச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தூய தமிழ்ப் பெயர் கொண்ட 6 முதல் 8 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர். 1956 ல் வங்கதேசத்தின் மொழியாக வங்க மொழி அறிவிக்கப்பட்டது. மொழிக்காக பிப். 21 ல் உயிர் நீத்த அந்த மாணவர்களின் மொழிப்பற்றை போற்றும் விதமாகவே உலகம் முழுவதும் 2000 ஆண்டிலிருந்து உலகத் தாய்மொழி நாள் கொண்டாடப்படுகிறது.
ஒவ்வொருவருக்கும் தாய்மொழி உயிரினும் மேலானது. அதனை எந்நாளும் போற்றி பாதுகாக்க வேண்டும். அழகிய தமிழ்ப் பெயர் கொண்ட மாணவர்களாகிய நீங்களும் உங்கள் பெற்றோர்கள் உங்களுக்கு வைத்த தூய தமிழ்ப் பெயர்களைப் போலவே உங்களின் பிள்ளைகளுக்கும் சூட்டி தமிழுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்றார். முன்னதாக தலைமை ஆசிரியர் தேவி வரவேற்றார். பட்டதாரி ஆசிரியர் நீலாவதி நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் புனிதவதி, உஷா, ராஜ்குமார்