தமுமுக சார்பில் நலத்திட்ட உதவிகள்

61பார்த்தது
தமுமுக சார்பில் நலத்திட்ட உதவிகள்
திருவாரூர், ஜூன்- திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின் ஆலோசனை கூட்டத்தில் , பொருளாதரத்தில் பின்தங்கிய இஸ்லாமிய மக்களுக்கு நிதி உதவிகளை தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின் மாநில பொதுசெயலாளர் ஹாஜாக்கனி வழங்கினார்.
தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின் ஆலோசனை கூட்டம் கடியாச்சேரி காதர் அவர்களின் இல்ல வளாகத்தில் நடைபெற்றது. திருவாரூர் மாவட்ட தமுமுக நிர்வாகி முஜிபுர் ரஹ்மான் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், தமுமுக நிர்வாகி செய்யது யூசுப் வரவேற்புரை வாசித்தார்.
தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழக மாநில பொதுசெயலாளர் ஹாஜாக்கனி அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில் விட்டுக்கட்டி, கடியாச்சேரி பள்ளங்கோவில் , மேட்டுப்பாளையம் பகுதிகளில் வசிக்கும் பொருளாதரத்தில் பின்தங்கிய முஸ்லீம் மக்களுக்கு குடும்ப செலவுகளுக்கும், மருத்துவ சிகிச்சைகளுக்கும் நிதி உதவிகளை ஹாஜாக்கனி வழங்கினார்.
கூட்டத்தின் நிறைவில் நகர தலைவர் இக்பால் நன்றி கூறினார். ஒன்றிய செயலாளர் கட்டிமேடு அன்சாரி, கடியாசேரி ஜமாஅத் மன்ற நிர்வாகிகள் அப்துல் காதர், ஜாகிர் உசேன், ஜெகபர் சாதிக், வர்த்தகர் சங்க நிர்வாகி தாவூது உள்ளிட்ட பலர் நிகழ்வில் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி