திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியம் மாணிக்கமங்கலம் ஊராட்சி, சிவபுரி, கல்விகுடி கிராமத்தில் குடிநீர் பிரச்சனையை ஒரு வார காலத்தில் சரி செய்வதாக பேச்சுவார்த்தையில் அரசு அதிகாரிகள் அறிவித்தும் இது நாள் வரை நடைமுறைப்படுத்தாத அதிகாரிகளை கண்டித்து இன்று காலை நீடாமங்கலம் வலங்கைமான் சாலையில் அமைந்துள்ள நரிக்குடியில் சாலை மறியல் போராட்டம் ஒன்றிய தலைவர் எஸ். சந்திரசேகர் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் ஏ. கே. வேலவன், ஒன்றிய செயலாளர் பி. விஜய், ஒன்றிய குழு உறுப்பினர்கள் மோகன்ராஜ், ஜெயராஜ், கிளை நிர்வாகி சத்யராஜ் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட தோழர்கள் சாலை மறியல் ஈடுபட்டனர். 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.