பேருந்து விபத்து ஒருவர் காயம்

71பார்த்தது
பேருந்து விபத்து ஒருவர் காயம்
நன்னிலம் அருகே ஆலங்குடி பகுதியை சேர்ந்தவர் 54 வயதுடைய செல்வதுரை. இவர் நன்னிலம் பகுதியில் ஒரு பூக்கடையில் பணிபுரிந்து வருகிறார். செல்வதுரை நன்னிலம் பகுதியில் இருந்து ஆலங்குடியில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்.
இந்த நிலையில் நன்னிலத்தில் இருந்து வேலங்குடிக்கு செல்லும் நகரப் பேருந்து மணவாளம்பேட்டை என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த போது பக்கவாட்டு சாலையிலிருந்து இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு செல்வதற்காக செல்வத்துரை பிரதான சாலையில் திரும்பியுள்ளார். அப்போது உபய வேதாந்தபுரத்தை சேர்ந்த மதன்ராஜ் என்பவர் ஒட்டி வந்த அரசு பேருந்து செல்வதுரையின் மீது மோதி எதிர்ப்பாராத விபத்து நடந்துள்ளது.
இதில் செல்வதுறைக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் அதிகம் வெளியாகிய நிலையில் பேருந்தின் அடியில் சிக்கி உள்ளார். அடிபட்ட செல்வதுரை அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி உள்ளார். அக்கம் பக்கத்தினர் செல்வதுரையை மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக நன்னிலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின் மேல் சிகிச்சைக்காக செல்வதுரை திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதிய விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. விபத்து குறித்து நன்னிலம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி