நடராஜா் கோயில் மண்டலபிஷேகம் நிறைவு

64பார்த்தது
நடராஜா் கோயில் மண்டலபிஷேகம் நிறைவு
திருவாரூா் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே உள்ள தில்லைவிளாகத்தில் ஆனந்த நடராஜா் உடனுறை சிவகாமி அம்மையாா் கோயிலில் மண்டலபிஷேக நிறைவு விழா நடைபெற்றது.

இந்தக் கோயிலில் 102 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த மாா்ச் 29-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதைத்தொடா்ந்து சுவாமிக்கு நாள்தோறும் மண்டலபிஷேக பூஜைகள் நடைபெற்று, நிறைவு விழா நடைபெற்றது.

இதையொட்டி கடங்களில் வைத்து பூஜை செய்யப்பட்ட புனித நீரைக் கொண்டு சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் நடைபெற்று, பின்னா் மகா அபிஷேகமும், மகா தீபாராதனை காட்டப்பட்டது. நிகழ்ச்சியில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். ஏற்பாடுகளை திருப்பணி குழுவினரும், கிராமவாசிகளும் செய்திருந்தனா்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி