சந்திரசேகரபுரம் கிராமத்தில் சோலார் பேனலை திருடிய நபர் கைது

85பார்த்தது
சந்திரசேகரபுரம் கிராமத்தில் சோலார் பேனலை திருடிய நபர் கைது
திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அடுத்த சந்திரசேகரபுரம் தெற்கு அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் மகன் சரவணன். இவர் வயலில் வைத்திருந்த ரூ 40, 000 மதிப்புடைய சோலார் பேனலை கடந்த 14ம் தேதி மர்ம நபர்கள் திருடி விட்டனர். இது தொடர்பாக விவசாயி சரவணன் வலங்கைமான் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

வலங்கைமான் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் ரெகுநாதபுரம் அருகே அணியமங்கலம் காமாட்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த சிவக்குமார் சோலார் பேனலை திருடியது தெரியவந்தது. அதனை அடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற வலங்கைமான் இன்ஸ்பெக்டர் அமுதா ராணி மற்றும் போலீசார் சிவக்குமாரை கைது செய்து அவர் மறைத்து வைத்திருந்த சோலார் பேனலை பறிமுதல் செய்தனர். மேற்கண்ட வழக்கில் குற்றவாளியை கைது செய்து சோலார் பேனலை பறிமுதல் செய்த இன்ஸ்பெக்டர் அமுதாராணி மற்றும் காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பாராட்டினார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி