திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் முகவரி கேட்டு சரியாக சொல்லாததால் கோபமடைந்த ஒரு கும்பல் நபர் ஒருவரின் வீட்டில் பெட்ரோல் வெடிகுண்டு வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், சாலையில் சென்ற நபரை கும்பலை சேர்ந்த நபர்கள் அரிவாளால் வெட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தும் நிலையில் சம்பவம் தொடர்பான சிசிடிவி வீடியோ வெளியாகியுள்ளது.