டிச., 21ஆம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

72பார்த்தது
டிச., 21ஆம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு
ஃபெஞ்சல் புயல் வெள்ள பாதிப்புக்கு உரிய நிவாரணம் வழங்கக்கோரி கோரி விழுப்புரத்தில் வருகிற டிச., 21ஆம் தேதி அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது. இது குறித்த செய்திக்குறிப்பில், வீடுகளை இழந்தவர்களுக்கும், பாதிக்கப்பட்ட விவசாயிகளின் பயிர்களுக்கான உரிய இழப்பீட்டுத் தொகையையும் வழங்காத தமிழ்நாடு அரசை கண்டித்து முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி