சமையல் கலைஞர்கள் சங்க துவக்க விழா

52பார்த்தது
திருவாரூரில் நடைபெற்ற சமையல் கலைஞர்கள் சங்க துவக்க விழாவில் அரசியல் சார்பற்ற சங்கமாக இது இருக்கும் என முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருவாரூரில் சமையல் கலைஞர்கள் சங்கத்தின் துவக்கவிழா மற்றும் நிர்வாகிகள் தேர்வு தனியார் அரங்கில் நடைப்பெற்றது. இதில் கும்பகோணம், தஞ்சாவூர், நாகை, சேலம், மயிலாடுதுறை, கன்னியாகுமரி காரைக்கால் உள்ளிட்ட பல்வேறு ஊர்களிலிருந்து ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் மாநில தலைவராக மணிகண்டன், பொது செயலாளராக மீராமைதீன், பொருளாளராக செய்யது முபாரக், செயலாளர்களாக முகமது சீராஜீதீன், தமிழ்ச்செல்வன், திருவாரூர் மாவட்ட தலைவராக கண்ணன் ஆகியோர் பொறுப்பேற்று கொண்டனர். கூட்டத்தில் சங்கத்தில் அதிக உறுப்பினர்களை இணைப்பது, தனி நலவாரியம் அமைப்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன. மேலும் இந்த சங்கமானது அரசியல் சார்பற்று இயங்கும் என முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எனவே எந்த அரசியல் கட்சியில் இருப்பவர்களும் எந்த இயக்கத்தில் இருப்பவர்களும் தயங்காமல் சங்கத்தில் இணையலாம் என கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த சங்கம் அனைவருக்கும் பொதுவானது, ஒற்றுமையே வலிமை என்ற தாரக மந்திரத்தோடு செயல்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி