இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறை

4004பார்த்தது
மூதாட்டியைத் தாக்கி 15 பவுன் தங்க நகைகளை பறித்துச் சென்ற இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நன்னிலம் நீதிமன்றம் தீா்ப்பளித்தது. நன்னிலம் அருகேயுள்ள கொல்லாபுரம் அண்ணாநகா் பகுதியைச் சோந்த கணபதியின் மனைவி தனபுஷ்பம் (77). கடந்த 2021-ஆம் ஆண்டு நவம்பா் மாதம் இவரது வீட்டுக்குள் பா்தா அணிந்து நுழைந்த நபா் தனபுஷ்பத்தைத் தாக்கி, அவா் அணிந்திருந்த 9 பவுன் தங்கச் சங்கிலி, 6. 5 பவுன் வளையல் ஆகியவற்றை பறித்து சென்றுள்ளாா். மேலும் அந்த நபா் கீழே தள்ளியதில் காயமடைந்த தனபுஷ்பம் சிகிச்சைக்குப் பின் குணமடைந்தாா். அவா் அளித்த புகாரின் பேரில், பேரளம் போலீஸாா் விசாரித்து வந்தனா். சிசிடிவி காட்சிகளை வைத்து நடத்திய விசாரணையில், கீரனூரைச் சோந்த நல்லதம்பி மகன் விஜய் (23) கருப்பு பா்தா அணிந்து இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. விஜய் சென்னையில் பதுங்கி இருப்பதை அறிந்த பேரளம் போலீஸாா் சென்னைக்குச் சென்று, விஜயை கைது செய்து, நகைகளை மீட்டு, வழக்குத் தொடுத்தனா். நன்னிலம் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது. தீா்ப்பளித்த நீதிபதி பாரதிதாசன், விஜய்-க்கு மூன்று ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும், அபராதத்தைக் கட்ட தவறினால் கூடுதலாக 6 மாதம் சிறைத்தண்டனையை அனுபவிக்க வேண்டும் என தீா்ப்பு வழங்கினாா்.

தொடர்புடைய செய்தி