மயிலாடுதுறை: காங். எம்எல்ஏ-வை மிரட்டிய திமுக நகர்மன்ற தலைவர்

4189பார்த்தது
மயிலாடுதுறையில் நூலகத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. அப்போது அங்கு வந்த திமுக நகர்மன்ற தலைவர் செல்வராஜ் நகராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்காமல் அடிக்கல் நாட்டு விழா நடத்தியதாக கடுமையாக ஒப்பந்ததாரரை சாடினார். அதனைத் தொடர்ந்து அங்கிருந்த காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமாரை காங்கிரஸ் ஓட்டு வாங்கியா ஜெயிச்ச? திமுக ஓட்டால் தான ஜெயிச்ச? என சரமாரி கேள்வி கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி