காய்கறி வியாபாரிகளுக்கு நிரந்தர கடைகள் வேண்டும்.

85பார்த்தது
காய்கறி வியாபாரிகளுக்கு நிரந்தர கடைகள் வேண்டும்.
மன்னார்குடி நகரில் காய்கனி வியாபாரிகளுக்கு நிரந்தர மார்க்கெட் அமைத்து தர வேண்டும் என்று நேற்று நடைபெற்ற சங்கத்தின் ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி நகர காய்கனி வியாபாரிகள் சங்க ஆலோசனை கூட்டம் வர்த்தக சங்க மாநில துணை தலைவர் ஞானசேகரன் தலைமையில் நேற்று நடந்தது. வர்த்தக சங்க தலைவர் ஆனந்த், மாவட்ட பொருளாளர் கருணாநிதி, பொதுச்செயலாளர் அசோகன், பொருளாளர் பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், மன்னார்குடி நகர காய் கனி வியாபாரிகள் சங்க தலைவராக கருணாநிதி, செயலாளராக ஹரி கிருஷ்ணன், பொருளாளராக செந்தில்குமார், துணை தலைவராக ராஜபாண்டியன், துணை செயலாளராக அழகர் ஆகியோர் புதிய நிர்வாகிகளாக பொறுப்பேற்றுக்கொண்டனர்.

கூட்டத்தில், மன்னார்குடி நகரத்தில் நிரந்தரமாக காய்கனி கடை வைத்திருப்பவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் வகையில் மினி சரக்கு வேன்கள் மூலம் வெங்காயம், தக்காளி, பூண்டு உள்ளிட்டவற்றை வியாபாரம் செய்வதை நகராட்சி மற்றும் காவல் துறையினர் இணை்ந்து கட்டுப்படுத்த வேண்டும். வணிக நிறுவனங்கள் மிகுந்த பகுதிகளில் தள்ளுவண்டி மற்றும் தரைக் கடைகளை ஒழுங்குபடுத்த வேண்டும். காய்கனி வியாபாரிகளுக்கு என நிரந்தர மார்க்கெட் அமைத்து தர வேண்டும். உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. முன்னதாக, அழகர் வரவேற்றார். செந்தில்குமார் நன்றி கூறினார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி