மன்னார்குடி அருகே மேலகண்டமங்கலம் பகுதியில் உள்ள கோரையாற்றில் மணல் கடத்துவதாக மன்னார்குடி வட்டாட்சியருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதன் அடிப்படையில் வருவாய்த்துறை அதிகாரிகள் கோரை ஆற்றில் சென்று பார்த்தபோது அங்கு டிராக்டரில் மணல் ஏற்றிக் கொண்டிருந்த மர்ம நபர்கள் தப்பி ஓடிச் சென்றனர். இதனையடுத்து டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டு கோட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் கோட்டூர் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் டிராக்டர் ஓட்டுநர் மேல கண்டமங்கலத்தை சேர்ந்த மோகன்ராஜ் என்பவர் கைது செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.