வடுவூர் புதுக்கோட்டையில் தென்னிந்திய அளவிலான கபடி போட்டிகள் நேற்று தொடங்கி இரண்டு நாட்கள் நடைபெற்றது. புதுகை நண்பர்கள் கபடி கழகம் நடத்தும் முதலாம் ஆண்டு தென்னிந்திய அளவிலான கபடி போட்டி திருவாரூர் மாவட்டம் வடுவூர் புதுக்கோட்டை கிராமத்தில் கடந்த சனிக்கிழமை இரவு தொடங்கியது.
போட்டியில் கேரளா கர்நாடகா தமிழ்நாடு போலீஸ் அணி எஸ் ஆர் எம் பல்கலைக்கழக அணி கன்னியாகுமரி அணி திருப்பூர் ஜெயசித்ரா அணி மயிலாடுதுறை சாய் அணி உள்ளிட்ட 15 விற்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டு விளையாடுகின்ற போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதலாம் பரிசாக ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாயும் இரண்டாம் பரிசாக ஒரு லட்ச ரூபாயும் மூன்றாம் பரிசாக 75 ஆயிரம் வழங்கப்பட உள்ளது.