குடவாசல் அருகே SIPCOT அமைக்க எதிர்ப்பு தொழில் துறை அமைச்சர் டி. ஆர். பி. ராஜா வை முற்றுகையிட்ட விவசாயிகள்
குடவாசல் தாலுகா கரையாப்பாலூர் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்கள். சுமார் 150 ஏக்கருக்கு மேலாக உள்ள மயிலாடுதுறை ஆதீனம், மற்றும் திருவாரூர் தியாகராஜர் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை ஐந்து தலைமுறைகளாக விவசாயம் செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில். தற்போது அந்த விளை நிலத்தில் தொழில்துறை சார்பில் திருவாரூர் மாவட்ட வேளாண் சிப்காட் தொழிற்சாலை ஒன்று அமைப்பதற்காக. இடத்தை தேர்வு செய்ய பார்வையிட வந்த தொழில்துறை அமைச்சர் டி ஆர் ராஜா வந்திருந்தார்.
உடன் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் மற்றும் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் வந்திருந்தனர்.
அப்பொழுது. விவசாயிகள் நாங்கள் விவசாயம் செய்து வரும் இந்த நிலத்தை வேளாண் சிப்காட் தொழிற்சாலை அமைக்க அனுமதிக்க மாட்டோம். வேறு இடத்தை பார்த்துக் கொள்ளுங்கள். என விவசாய குடும்பங்களைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட விவசாய தொழிலாளர்கள். பார்வையிட வந்த டிஆர்பி ராஜாவை முற்றுகையிட்டனர்.
தொடர்ந்து விவசாயிகள் கோஷங்கள் இருக்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.