மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோவில் ஆடிப்பூர விழா கொடியேற்றம்

82பார்த்தது
மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவில் ஆடிப்பூரத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள ராஜகோபால சுவாமி கோவிலில் இரண்டாவது பிரகாரத்தில் செங்கமலத் தாயார் தனி சன்னதியில் அருள் பாலிக்கிறார். தாயாரை முன்னிறுத்தி ஆண்டுதோறும் ஆடிப்பூர பெருவிழா பத்து நாட்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஆடிப்பூரத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக சிம்ம கொடி கோவிலை சுற்றி எடுத்து வரப்பட்டு கொடிமரம் அருகே தீட்சிதர்கள் வேத மந்திரம் ஓதி பூஜைகள் செய்து கொடி மரத்தில் சிம்மக்கொடி மரத்தில் கொடி ஏற்றப்பட்டது. பின்னர் செங்கமல தாயாருக்கு தீபாரதனை காண்பிக்கப்பட்டது. நாள்தோறும் இரவு செங்கமலத்தாயார் அன்னம், சிம்மம், கமலம், குதிரை, கருடன், யானை என பல்வேறு வாகனங்களில் கோவிலில் உள்பிரகாரத்தில் வீதி உலா நடைபெற உள்ளது. முக்கிய விழாவான ஆடி பூர திருவிழா அடுத்த மாதம் 7ஆம் தேதி காலை நடைபெற உள்ளது.

தொடர்புடைய செய்தி