மகாவிஷ்ணு குறித்து மன்னார்குடி ஜீயர் பேட்டி

51பார்த்தது
மன்னார்குடியில் சென்டலங்கார செண்பக மன்னார் ஜீயர் நேற்று மாலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்

கிறிஸ்தவர்கள் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வேளாங்கண்ணிக்கு தேர் இழுத்துக் கொண்டு சிலைகளை சுமந்து கொண்டு பாதயாத்திரை செல்கின்றனர். இவர்கள் யாரிடம் அனுமதி பெற்று இத்தகைய தேர் பவனிகளை நடத்துகின்றனர்.? அவர்களுக்கு அரசு தடை விதிக்கவில்லை. ஆனால் விநாயகர் சதுர்த்தி சிலை ஊர்வலத்திற்கு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கிறது. இந்து மதத்திற்கு விரோதமாக செயல்படுவது இதன் மூலம் தெளிவாகத் தெரிகிறது. மகாவிஷ்ணு மீது வழக்கு போடுவது மிகவும் தவறான ஒன்று. அவர் ஜாதி மதம் சமயம் பற்றியோ பிற மதங்கள் பற்றியோ பள்ளி மாணவர்கள் குறித்து தவறான கருத்துக்களை தெரிவிக்கவில்லை. அத்தகைய கருத்துக்களை தெரிவித்து இருந்தால் மகாவிஷ்ணு மீது நானே வழக்கு தொடர வேண்டுமென தெரிவித்திருப்பேன். எனவே மகாவிஷ்ணு மீது தமிழக அரசு வழக்கு தொடுப்பது என்பது அந்த அரசருக்கு பிளாக் மார்க்காக அமையும் என்றும் மன்னார்குடி ஜீயர் தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி