காதல் மனைவிக்கு பாலியல் தொல்லை: கணவர் கைது

72பார்த்தது
காதல் மனைவிக்கு பாலியல் தொல்லை: கணவர் கைது
தர்மபுரி அரூரை சேர்ந்த இளங்கேஸ்வரன் நீதிமன்றத்தில் பணியாற்றி வருகிறார். இவர் திருப்பூரைச் சேர்ந்த கௌரி என்பவரை காதலித்து கடந்தாண்டு திருமணம் செய்தார். இருவரும் பாலக்கோட்டில் வசித்து வந்தனர். கௌரி 3 மாத கர்ப்பமாக இருந்துள்ளார். இதனிடையே இளங்கேஸ்வரன், கௌரிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததில், கர்ப்பம் கலைந்துள்ளது. பாதிக்கப்பட்ட அவர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் கணவனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி