தென்னிந்தியவலுதூக்கும் போட்டியில் மன்னார்குடி பெண் சாதனை

58பார்த்தது
சேலத்தில் நடைபெற்ற தென்னிந்திய அளவிலான வலுத்தூக்கம் போட்டியில் மன்னார்குடி வீராங்கனை இரும்பு பெண்மணி பட்டம் வென்றார்.

சேலத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தென்னிந்திய அளவிலான வலுத்தூக்கும் போட்டிநடைபெற்றது. இதில் தமிழ்நாடு ஆந்திரா கேரளா கர்நாடகா பாண்டிச்சேரி என பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 250 க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்றனர்

தமிழ்நாடு சார்பாக 49 வீராங்கனைகள் பழுதூக்கும் போட்டியில் பங்கேற்றனர் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி எம் ஆர் டி ஜிம்மில் பயிற்சி பெறும் பவித்ரா 57 கிலோ சீனியர் பிரிவில் ஸ்குவாட் பெஞ்ச் டெட் என மொத்தம் 405 புள்ளிகள் பெற்று தங்க பதக்கம் வென்றார்.

ஜூனியர்களுக்கான 63 கிலோ எடை பிரிவில் வீராங்கனை நிறைமதி ஸ்க்குவாட், பெஞ்ச், டெட் என மொத்தம் 385 கிலோ எடையை தூக்கி வெள்ளி பதகம் வென்றார். இதே போல் ஒப்பன் சீனியர் பிரிவில் பவித்ரா மூன்றாம் இடம் பிடித்து இரும்பு பெண்மணி பட்டம் வென்றார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி