மன்னார்குடி-பெங்களூரு வந்தேபாரத் ரயில் இயக்க வேண்டும்

81பார்த்தது
மன்னார்குடி-பெங்களூரு வந்தேபாரத் ரயில் இயக்க வேண்டும்
ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தின் ஒரு பகுதியான நீடாமங்கலம் – மன் னார்குடி இடையேயான மீட்டர் கேஜ் ரயில் பாதையில் பல்வேறு காரணங் களுக்காக 1974ம் ஆண்டு முதல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இந்த சேவை யை மீண்டும் துவங்க வேண்டும் என பொது மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்த தடத்தில் மீண்டும் ரயில் சேவை என்பது வெறும் கனவாகவே இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 2011ம் ஆண்டு முதல் மன்னார்குடி ரயில் நிலையம் மீண்டும் செயல்பட துவங்கியது. பொதுமக்களின் 34 ஆண்டு கால கனவை நிஜமாக்கி கொடுத்தவர் அப்போதைய ரயில்வே நிலைக் குழு தலை வராக இருந்த திமுகவை சார்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் டிஆர் பாலு ஆவார். அவரின் தொடர் முயற்சி காரணமாக இது சாத்தியமானது. டிஆர் பாலு தீட்டிய பல்வேறு திட்ட ங்கள் மூலம் மன்னார்குடி ரயில் நிலை யம் வளர்ச்சி பாதையில் தொடர்ந்து பயணித்தது. அதனை தொடர்ந்து அவரது மகனும் தற்போதைய தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா எடுத்த பல்வேறு முயற்சிகள் காரணமாக மன்னர்குடி ரயில் நிலையத்தில் சரக்கு முனையம் மற்றும் நீடாமங்கலம் முதல் மன்னர்குடி வரை உள்ள ரயில் பாதை மின் மயமாக்கப்பட்டது. இந்நிலையில் மன்னார்குடியில் இருந்து பெங்களூருக்கு வந்தே பாரத் ரயில் இயக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி