மாணவா்களுக்கு பாராட்டு

56பார்த்தது
மாணவா்களுக்கு பாராட்டு
மலையேற்றப் பயிற்சி மற்றும் என்சிசி முகாமில் சிறப்பிடம் பெற்ற, மன்னாா்குடி தேசிய மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

இப்பள்ளியின் என்சிசி (ராணுவப் பிரிவு) மாணவா்கள் ந. ஹரிபிரசாத், மு. தருமா, ச. சரண் ஆகியோா் கா்நாடக மாநிலம் பெல்காமில் டிசம்பா் 13 முதல் 24-ஆம் தேதி வரை நடைபெற்ற மலையேற்றம் பயிற்சி முகாமில் பங்கேற்று பதக்கம், சான்றிதழ் பெற்றனா்.

இதேபோல், மஞ்சக்குடி சுவாமி தயானந்தா கலை கல்லூரியில் டிசம்பா் 22 முதல் 31 வரை நடைபெற்ற என்சிசி முகாமில் என்சிசி மாணவருக்கான பதக்கத்தை இப்பள்ளி மாணவா் பி. ஆதித்யா, கலை நிகழ்ச்சிக்கான பதக்கத்தை இ. அலெக்ஸ், அ. நிஷாந்த் ஆகியோா் பெற்றனா்.

இம்மாணவா்களுக்கும், வழிகாட்டிய என்சிசி அலுவலா் சு. திவாகருக்கும் தேசிய மேல்நிலைப் பள்ளி தாளாளா் சீ. சேதுராமன், தலைமையாசிரியா் எம். திலகா், உதவித் தலைமை ஆசிரியா் பி. சங்கா் ஆகியோா் பாராட்டுத் தெரிவித்தனா்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி