தரிசுவேலி கிராமத்தில் தேர்தல் புறக்கணிப்பு - பரபரப்பு

1545பார்த்தது
மன்னார்குடி அருகே தரிசு வேலி கிராமத்தில் குடிநீர் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தராததை கண்டித்து தேர்தலை புறக்கணிக்க போவதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே தரிசு வேலி கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர் இந்த கிராமத்தில் இருந்து அருகில் உள்ள ஊர்களுக்கு செல்ல சரியான சாலை வசதி இல்லை என்றும் அன்றாடம் குடிப்பதற்கு கூட தூய்மையான நீர் இல்லாமல் கழிவுநீர் கலந்த சுகாதாரமற்ற நீரை பருகுவதால் பல்வேறு நோய்த் தொற்றுகள் ஏற்படுவதாகவும் கிராம மக்கள் தெரிவித்தனர்.

5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் ஆரம்பக்கல்வி கற்க அங்கன்வாடி மையம் சுடுகாடு செல்வதற்கு தரமான சாலை என அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி கடந்த 10 ஆண்டுகளாக அரசு அதிகாரிகள் அரசியல் கட்சி பிரதிநிதிகளிடம் மனு அளித்தும் எடுத்துக் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தறுசுவலி கிராம மக்கள் தெரிவித்தனர் இந்நிலையில் தற்போது நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கூறி கருப்பு கொடி கட்டி கிராம மக்கள் ஒன்று சேர்ந்து தேர்தலை புறக்கணிப்பதாக கோஷமிட்டனர்.

தொடர்புடைய செய்தி