கோடை மழையால் பருத்தி விவசாயிகள் மகிழ்ச்சி

79பார்த்தது
திருத்துறைப்பூண்டி சுற்றுவட்டார பகுதிகள் முழுவதும் தற்பொழுது இடைவிடாத பெய்த தொடர் கனமழை காரணமாக பருத்தி விவசாயிகள் மகிழ்ந்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி சுற்றுவட்டார பகுதிகள் மணலி, கச்சனம், ஆழத்தம்பாடி, ஆண்டாங்கரை, ஆலிவலம், பூசலங்குடி, பிசையூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று கோடை மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.

ஆண்டாங்கரை, ஆலிவலம், பூசலங்குடி பகுதிகளில் போர்வெல் மூலம் விவசாயிகள் பருத்தி சாகுபடி பணி மேற்கொண்டிருந்த வருகின்றனர். தற்பொழுது மழை இல்லாத காரணத்தால் முற்றிலும் பருத்திகள் சேதமாகும் நிலை ஏற்பட்டது. ஆனால் தற்போது பெய்த கோடை மழையால் பருத்தி சாகுபடிக்கு ஏதுவாக இருப்பதாக விவசாயிகள் கூறினர்.