திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பந்தலடி பகுதியில் உள்ள பிரபலமான புத்தக கடை வாசலில் குப்பையில் வீசுவதற்காக அதிமுக கொடிகள் எடுத்து வைக்கப்பத்துள்ளது.
அதிலும் குறிப்பாக அதிமுகவில் ஓபிஎஸ் ஒருங்கிணைப்பாளராகவும் ஈபிஎஸ் துணை ஒருங்கிணைப்பாளராகவும் இருவரும் ஓரணியாக இருந்தபோது இரட்டை இலை மற்றும் முன்னாள் முதல்வர்களின் படங்களுடன் அச்சடிக்கப்பட்ட காகிதக் கொடிகள் இவை. இருவரின் படம் அட்சிடப்பட்ட கொடிகள் இனி தேவைப்படாதோ என நினைத்து அதிமுக கொடிகளை சாலையோரம் வைக்கப்பட்டுள்ளது.