கோவை பீளமேடு பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். ரயில்வே டிக்கெட் பரிசோத்தவரான இவர் நேற்று காலை கோவையில் இருந்து மன்னார்குடிக்கு வந்து செம்மொழி ரயிலில் பணிக்காக வந்தார். பணியை முடித்துவிட்டு தனது நண்பர்களுடன் மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்வதற்காக வந்தார். சாமி தரிசனம் முடிந்த பிறகு வெளியில் வந்த சீனிவாசன் தனக்கு நெஞ்சு வலிப்பதாக நண்பர்களிடம் கூறிவிட்டு திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் மற்றும் கோவிலில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர்கள் சீனிவாசனை பரிசோதனை செய்தனர் அப்போது அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரிய வந்தது. இதுகுறிப்பு தகவல் அறிந்த மன்னார்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சீனிவாசன் உடலை கைப்பற்றி குறைந்த பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.