காமராஜர் துறைமுகத்தில் கண்டெய்னர் லாரி ஓட்டுநர்கள் திடீர் போராட்டம்
துறைமுகத்தில் போதிய பணியாளர்கள் இல்லாததால் இறக்குமதி ஏற்றுமதி பிரிவில் கண்டெய்னர்களை கையாளுவதில் காலதாமதம் ஏற்படுவதாகவும் அடிப்படை வசதி இல்லாமல் ஓட்டுநர்கள் பாதிக்கபடுவதால் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் இறக்குமதி ஏற்றுமதி பிரிவில்
நாள்தோறும் ஆயிரக்கணக்கான கண்டைனர் லாரிகள் வந்து செல்லும்
இந்த நிலையில்
கண்டெய்னர்களை லாரியில் ஏற்றிடவும் இறக்கிடவும் போதிய அனுபவமிக்க ஊழியர்கள் பணியில் அமர்த்தபடாததால் அடிக்கடி காலதாமதம் ஆவதுடன் விபத்துகளால் உயிரிழப்பும் ஏற்படுவதால் ஓட்டுநர்கள் நாள் முழுவதும் அங்கே காத்துக் கிடக்கும் நிலைமை ஏற்படுவதால் தொடர்ந்து தினந்தோறும் பாதிக்கப்படுவதாகவும் துறைமுக நிர்வாகம் உரிய பணியாளர்களை கூடுதலாக நியமித்து உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை துறைமுகத்தில் ஏற்படுத்தி தர வலியுறுத்தி லாரிகளை இயக்காமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஓட்டுநர்கள் ஈடுபட்டு வருகின்றனர் ஓட்டுநர்களின் வேலைநிறுத்த போராட்டம் காரணமாக அப்பகுதியில் இருநூறுக்கும் மேற்பட்ட லாரிகள் துறைமுக வாயலில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளது.