முஸ்லிம்கள் கொண்டாட்டம்

53பார்த்தது
ரம்ஜான் பண்டிகையையொட்டி இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து மசூதிகளில் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டு ஆரத்தழுவி வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.

இஸ்லாமியர்களின் புனித மாதம் ரமலான். உலகெங்கிலும் உள்ள இஸ்லாமிய மக்கள் ரமலான் நோன்பை கடைப்பிடித்து ஈடுபட்டு ஆண்டுதோறும் ரம்ஜான் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக
திருவள்ளூர் ஊத்துக்கோட்டை செல்லும் பகுதியில் அமைந்துள்ள ஈத்கா மைதானத்தில் சிறுவர்கள் பெரியோர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர். இஸ்லாமியர்களின் நோன்பு வழிபாடு என்பது அதிகாலை நாலு மணிக்குள் உணவை உண்டு விட்டு நோன்பு நோற்று மாலை சூரியன் மறைந்த பின்னர் நோன்பு திறப்பது வழக்கம் ஆகும்.


இந்த நோன்பு மூலம் பசித்து இருப்பதும், தாகித்திருப்பதும், பல்வேறு தீய செயல்களில் இருந்து விடுபட்டு மன கட்டுப்பாட்டை கொண்டு வருவதும் இந்த நோன்பின் சிறப்பம்சமாகும். 30 நாள் நோன்பு முடிந்த நிலையில் மீண்டும் வளர்பிறை தென்பட்டவுடன் ரமலான் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

இப்பண்டிகையொட்டி திருவள்ளுர் டோல்கேட்டில் உள்ள ஜாமியா மசூதிக்கு சொந்தமான ஈத்கா மைதானத்தில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. தொழுகை முடிந்த பின்னர் ஒருவருக்கொருவர் கட்டித் தழுவி வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி