சிலம்ப போட்டி 1000கும் மேற்பட்டோர் பங்கேற்பு

63பார்த்தது
*சென்னை சோழிங்கநல்லூரில் பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்ற மாநில அளவிலான சிலம்ப போட்டி, 50 குழுவை சேர்ந்த 1000 கும் மேற்பட்டோர் பங்கேற்பு*


சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் "தி லெஜன்ட் மார்ஷியல் ஆர்ட்ஸ் அசோசியேசன் சார்பில் பள்ளி மாணவ மாணவியருக்கான மாநில அளவிலான சிலம்ப போட்டி ஆசான் கராத்தே சுதர்சன் தலைமையில் நடைபெற்றது

மதுரை, திருச்சி, கோயமுத்தூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டத்தை சார்ந்த 50 கும் மேற்பட்ட குழக்களாக சுமார் 1000 கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிக பங்கேற்றனர்.

இதில் 5 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்டோர் கலந்து கொண்டு ஒற்றை கொம்பு, இரட்டை கொம்பு, வேல்கம்பு, சுருள் வால், மான் கொம்பு உள்ளிட்ட 6 பிரிவுகளில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.

இந்த நிகழ்ச்சிக்கு பல்வேறு அமைப்பை சார்ந்த மூத்த ஆசான்கள் சரவணன், சுதாகரன், சூர்யமூர்த்தி ஆகியோர் வெற்றி பெற்று மாணவ மாணவிகளுக்கு கோப்பை மற்றும் சான்றிதழ்களை வழங்கினர்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் தி லெஜன்ட் மார்ஷியல் ஆர்ட்ஸ் அசோசியேசன் ஆசிரியர்கள் பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி