திருவள்ளுர் அடுத்த நாராயணபுரம் கொசஸ்தலை ஆற்றில் சட்ட விரோதமாக மணல் அள்ளப்பட்டு வருவதாக திருவள்ளூர் தாலுகா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ள அடிப்படையில் போலீசார் கொசஸ்தலை ஆற்றுக்கு சென்றுள்ளார். அப்பொழுது போலீசார் வருவதை கண்டு மணல் அள்ளிக்கொண்டிருந்த 4 பேர் அங்கிருந்து வாகனத்தில் தப்பி சென்றனர், அப்போது போலீசார் அவர்களை இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்தபோது வாகனத்தில் வைத்திருந்த மணல் மூட்டையை கீழே தள்ளிவிட்டு எந்தவித அடையாளம் இல்லாமல் குன்னவலம் பகுதியில் வீட்டின் வெளியே வாகனத்தை கழுவி வெளியே நிறுத்தப்பட்டுள்ளதை போலீசார் நம்பர் பலகையை வைத்து பார்த்தபோது மணல் திருடிய சென்ற வாகனம் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, அதனைத் தொடர்ந்து வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.