திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை அருகே தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர்கள் சங்கத்தினர் மாநில சிறப்பு தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் நியாய விலைக்கடை பணியாளர்களுக்கு ஊதியத்தில் பிடித்தம் செய்த வருங்கால வைப்பு நிதியை அலுவலகத்தில் செலுத்தப்பட வேண்டும். நியாய விலைக்கடை பணியாளர்களுக்கு பணிப்பதிவேடு (SR) நாளது தேதி வரை பதிவு பராமரிக்கப்பட வேண்டும். நியாய விலைக்கடை பணியாளர் அனைவருக்கும் (ATM) மூலம் சம்பளம் வழங்கப்பட வேண்டும். அனைத்து நிதிப் பயன்களும் (ATM) மூலம் வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 200 கற்கும் மேற்பட்ட நியாயவிலை பணியாளர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த கோரிக்கைகளை தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் செப்டம்பர் 5 -ந் தேதி தமிழக முழுவதும் நியாயவிலை பணியாளர் போராட்டத்தில் ஈடுபட போவதாக தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர்கள் சங்கத்தின் சிறப்பு மாநில தலைவர் பாலசுப்பிரமணியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.