ஆம்ஸ்ட்ராங் கொலையை கண்டித்து பிஎஸ்பி கட்சியினர் ஆர்ப்பாட்டம்

78பார்த்தது
திருவள்ளூர் மருத்துவ கல்லூரி முன்பு பிஎஸ்பி தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலையை கண்டித்து அக்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்: சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தனர்

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி முன்பு சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் திருவள்ளூர் மாவட்ட பகுஜன் சமாஜ் கட்சியினர் அக்கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலையை கண்டித்து வழக்கை சிபி ஐ க்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது முதலமைச்சர் மு க ஸ்டாலினின் தொகுதியான கொளத்தூர் தொகுதியில் ஆம்ஸ்ட்ராங் அவரது வீட்டில் வைத்து படுகொலை செய்யப்பட்டதற்கு தமிழக அரசை கண்டித்து கண்டன கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பிஎஸ்பி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று கோஷம் எழுப்பினர். ஒருங்கிணைந்த பகுஜன் சமாஜ் கட்சி மாவட்ட நிர்வாகிகள் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக ஆட்சியில் இன்றும் கூட நாம் தமிழர் கட்சி பிரமுகர் கொலை நடை பெற்று உள்ளதை சுட்டிக்காட்டி அதனை வன்மையாக கண்டித்தனர். முன்னதாக இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தி ஆம்ஸ்ட்ராங் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மரியாதை செய்து ஆர்ப்பாட்டம் செய்தனர் இதில் கீழனூர் புங்கத்தூர் தேவா வழக்கறிஞர் சந்திரசேகர் உள்ளிட்டோரும் திரளாக பெண்களும் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி