அறுவடை இயந்திரம் எரிந்து நாசமானது

51பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி பகுதியில் கோடை காலம் தொடங்கும் முன்பே வெயிலின் தாக்கம் அதிகரித்து ஏப்ரல் முதல் வாரத்தில் சதத்தை கடந்து கடந்த 10 நாட்களாக 104 டிகிரி சுட்டெரித்து வருகின்றது. இதனால் அனல் காற்று வீசி வெப்பம் உச்சகட்டத்தை அடைந்துள்ளதால், சிறுவர்கள், முதியவர்கள் வெளியில் செல்ல பீதி அடைந்து வீடுகளில் முடங்கியுள்ளனர். கோடை வெயிலின் உச்சகட்டமாக கத்திரி வெயில் மே 4ம் தேதி தொடங்குவதற்கு முன்பாகவே வெயில் தாக்கம் உச்சகட்டத்தை அடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள், போக்குவரட்த்து தொழிலாளர்கள், வியாபாரிகள் கடும் அவதிப்படுகின்றனர். இந் நிலையில், திருத்தணி பகுதியில் விவசாயிகள் சாகுபடி செய்த நெற்பயிர் மகசூல் செய்ய நெற்பயிர் அறுவடை இயந்திரத்தை பயன்ப்படுத்தி வருகின்றனர். இதற்காக திருவண்ணாமலை மாவட்ட போளூர் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் திருத்தணி பகுதியில் வாடகைக்கு நெற்பயிர் அறுவடை செய்து வருகிறார். திருத்தணி நகராட்சிக்கு உட்பட்ட பாப்பிரெட்டிப்பள்ளி பகுதியில் வீடுகளுக்கு அருகில் வெட்ட வெளியில் 4 நாட்களுக்கு முன்பு நிறுத்தி வைத்திருந்த அறுவடை இயந்திரம் 11 மணி அளவில் வெப்பம் அதிகரித்து திடீரென்று தீப்பற்றிக் கொண்டது.

தொடர்புடைய செய்தி