திருத்தணி அடுத்த கே. ஜி. கண்டியில் வசித்து வருபவர் கண்ணம்மா(65). இவரது மகள் அம்பிகா(39), உறவினர் முறையில் அரசு பேருந்து ஓட்டுநர் பிரகாஷ்(47) என்பவருக்கு தனது மகளை திருமணம் செய்து வைத்துள்ளார். கணவன் மனைவி இடையே சொத்து பிரச்சனை ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
அம்பிகாவை பிரிந்த பிரகாஷ் இரண்டாவதாக தீபிகா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இதில் முதல் மனைவி அம்பிகாவின் அம்மாவான கண்ணம்மா இடத்தில் உறவு முறையில் 1. 5கோடி மதிப்புடைய சொத்துக்களை பிரிப்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த சொத்து தகராறு தொடர்பாக ஏற்கனவே திருத்தணி காவல் நிலையத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இதே போல் நீதிமன்றத்திலும் நிலுவையில் இரு தரப்பினருக்கும் வழக்கு உள்ளது.
இந்நிலையில் கண்ணம்மா தரப்புக்கும், இவரது மருமகன் பிரகாஷ் தரப்புக்கும் தகராறு ஏற்பட்டது. தகாத வார்த்தையில் பேசிக்கொண்டு இரவில் ஏற்பட்டு சண்டை முற்றி பிரகாஷ் கண்ணம்மாவின் கழுத்தில் பிளேடு வைத்து அறுத்து கொலை செய்ய முயற்சி செய்ததால் கண்ணம்மா ஆபத்தான நிலையில் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில்
சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். கோபமடைந்த கண்ணம்மாவின் உறவினர்கள் பிரகாஷை சரமாரியாக தாக்கினர். இதில் அவர் காயங்களுடன் திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.