திருத்தணி ஸ்ரீ ராமர் பஜனை கோவிலில் கும்பாபிஷேகம்

50பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி நகராட்சியில் பெரிய தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ தணிகை மீனாட்சி அம்மன் ஆலயம் துணை சார்ந்த ஸ்ரீ ராமர் பஜனை கோவிலில் சம்புரோக்ஷ்ண கும்பாபிஷேக விழா நேற்று(செப்.17) மாலை திருக்கோயில் வளாகத்தில் பகவத் பிரார்த்தனை, சங்கல்பம், புண்யாஹ்வாஸணம், கோ பூஜை, வாஸ்து சாந்தி, ஹாமம், பூர்ணாஹீதி, பூஜையுடன் இன்று காலை 6: 00 மணிக்கு விஸ்வரூபம், புண்யாஹ்வாஸணம், பூஜைகளுடன், பக்தி மேலங்கள் முழங்க, புனித கலசத்திற்கு  கும்பாபிஷேகம் புனித நீர் ஊற்றப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கும் கும்பாபிஷேக நீர் வழங்கப்பட்டது. திருக்கோயில் வளாகத்தில் ஸ்ரீ ராமர், சீதா தாய், லட்சுமணன், ஆஞ்சநேயர், ஆகிய விக்கிரங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். சிறப்பு பூஜை செய்யப்பட்ட பிரசாதங்களை வழங்கினார்கள்.

தொடர்புடைய செய்தி