சாலையோரம் மலை பாம்பு லாவகமாக பிடித்த தீயணைப்பு வீரர்கள்

71பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகராட்சியில் பழைய சென்னை சாலையில் மின்சாரத் துறை அலுவலகம், சார் பதிவாளர் அலுவலகம், நெடுஞ்சாலை துறை அலுவலகம், டாக்டர் ராதாகிருஷ்ணன் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,
இப்படி முக்கியமான இந்த பகுதியில் மாநில நெடுஞ்சாலையில்,
இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பொதுமக்கள் அதிகம் நடை பயிற்சி சென்று கொண்டிருந்த இந்த பகுதியில்
இந்த பகுதியில் திடீரென்று மலைப் பாம்பு ஒன்று வந்தவுடன் இந்த பகுதியிலிருந்து நடைபயிற்சி சென்று கொண்டிருந்த பொதுமக்கள் இதனை கண்டவுடன் தலை தெரிக்க ஓடி விட்டனர்
பொது மக்களை கண்டவுடன் இந்த மலைப்பாம்பு அருகில் இருந்த நெடுஞ்சாலைத்துறை காம்பவுண்ட் சுவர் கால்வாய் பகுதியில் ஒளிந்து கொண்டது உடனடியாக பொதுமக்கள் கொடுத்த தகவலின் அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திருத்தணி தீயணைப்பு படை வீரர்கள் 40 நிமிடம் போராடி ஒளிந்து கொண்டிருந்த மலைப்பாம்பை லாவகமாக தீயணைப்பு படை வீரர்கள் பிடித்து சென்றனர் இந்த மலைப்பாம்பை தீயணைப்பு படை வீரர்கள் கூறுகையில் 7 அடி நீளமுள்ள இந்த மலைப்பாம்பு மிக அரிதான ஒரு மலைப்பாம்பு என்றும் தெரிவித்தனர் மேலும் இந்த மலைப்பாம்பை தீயணைப்பு படை வீரர்கள் திருத்தணி வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்
வனத்துறை அதிகாரிகள் இந்த மலைப்பாம்பை அடர்ந்த காட்டுப்பகுதியில் எடுத்துச் சென்று விட்டனர்.

தொடர்புடைய செய்தி