திருத்தணி அருகே நாய்களுக்கு பயிற்சி

54பார்த்தது
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் என்டிஆர்எப் எனப்படும் தேசிய பேரிடர் மீட்புப் படை மையம் செயல்படுகிறது.  


இங்கு பேரிடர் காலங்களில் கட்டட இடிபாடுகளில் சிக்கிய நபர்களை உயிருடன்  மீட்க உதவும்  வகையில் மோப்ப நாய் பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சி அளிக்கப்பட்ட பின் நாடு முழுதும் உள்ள மையங்களுக்கு நாய்கள் அனுப்பப்படும்.  


இந்நிலையில் பொது இடங்களில் மனிதர்களிடம் நட்பு ரீதியாக பழகும் விதத்தில் நாய்களுக்கும் மனிதர்களுக்கும் இடையே பயத்தை போக்கும் விதத்தில்  திருவாலங்காடு ரயில் நிலையத்தில் மக்களிடம்  எளிதாக பழக  நாய்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது


அப்போது படை பிரிவின் கால்நடை மருத்துவர் சைலேந்திர சிங், மோப்ப நாய்கள் பயிற்சியாளர்கள் ஈஸ்வரராவ் மற்றும் முத்துக்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி