ஆடி கிருத்திகை விழா: அனைத்து துறை அதிகாரிகள் ஆலோசனை கூட்டம்

59பார்த்தது
முருகப்பெருமானின் ஐந்தாம் படை வீடான திருத்தணி முருகன் கோவிலில் ஆடி கிருத்திகை தப்பத் திருவிழா இம்மாதம் 27ஆம் தேதி அஸ்வினுடன் தொடங்கி, 28ஆம் தேதி பரணி , 29 ம் தேதி முதல் நாள் ஆடிக்கிருத்திகை மாலை தெப்பத் திருவிழா, 30 தேதி இரண்டாம் நாள்  தெப்ப திருவிழா, 31ஆம் தேதி மூன்றாம் நாள் தெப்பத் திருவிழா, என ஐந்து நாட்களுக்கு நடைபெற உள்ளது விழாவில் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, கேரளா உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள்  திருத்தணி முருகன் கோயிலில் குவிந்து சாமி தரிசனம் செய்து காவடிகள் செலுத்த உள்ளனர். விழா ஏற்பாடுகள் குறித்து கோட்டாட்சியர் தீபா தலைமையில் அனைத்து துறை அலுவலர்கள் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.   இதில் பக்தர்களுக்கு தேவையான தற்காலிக பேருந்து நிலையங்கள் குடிநீர், கழிவறைகள், மருத்துவ வசதி, உட்பட அடிப்படை வசதிகள் மேற்கொள்வது குறித்து துறை ரீதியான அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட உள்ள இடங்களில் நேரடியாக சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இக்கூட்டத்தில் டிஎஸ்பி விக்னேஷ் கோவில் இணை ஆணையர் (பொறுப்பு) அருணாச்சலம் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி