தூய்மை பணியாளர்களுக்கு நகராட்சி சார்பில் பாராட்டு விழா.

54பார்த்தது
திருத்தணி அருள்மிகு சுப்பிரமணியசாமி திருக்கோயிலில் ஆடிகிருத்திகை பெருவிழாவை முன்னிட்டு திருத்தணி நகராட்சியை  சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களை பணியில் அமர்த்தி திருத்தணி மலைக்கோவில் மற்றும்  நகராட்சி சார்ந்த அனைத்து பகுதிகளிலும் நான்கு நாட்களாக  தூய்மை படுத்தும் பணியில் தொடர்ந்து ஈடுப்பட்டனர்.

இதனையடுத்து பணியில் ஈடுபட்ட இவர்களை பாராட்டிடும்  விதமாக திருத்தணி நகராட்சி சார்பில் நகரமன்ற தலைவர் சரஸ்வதி பூபதி  தலைமையில் தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது.


இந்நிகழ்வில் திருத்தணி நகரமன்ற துணை தலைவர் சாமிராஜ் மற்றும் துணைகாவல் காண்காணிப்பாளர் விக்னேஷ் தமிழ்மாறன், ஆகியோரும் ஆடிகிருத்திகை பெருவிழாவில் சிறப்பாக பணியாற்றி திருத்தணி நகரத்தை  தூய்மைபடுத்திய  பணியாளர்களை பாராட்டி நன்றி தெரிவித்தனர். அதனை தொடர்ந்து தூய்மை  பணியாளர்களுக்கு நன்றிகளை தெரிவித்தும் அவர்களுக்கு நினைவு பரிசுகளை நகரமன்ற தலைவர் சரஸ்வதி பூபதி 300  பணியாளர்களுக்கும் வழங்கினார். இந்நிகழ்வில் நகராட்சி ஆணையர் அருண் மற்றும் நகரமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி