திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே தரணிவராகபுரம் கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் குமார் (40) விவசாயி. இவர் இன்று காலை வீட்டிலிருந்து தனது எலக்ட்ரிக் பைக்கில் திருத்தணி மார்க்கெட்டுக்கு சென்றுக் கொண்டிருந்தார். திருத்தணி கமலா திரையரங்கம் அருகில் கடப்பா ட்ரங்க் ரோட்டில் சென்றுக் கொண்டிருந்த பைக்கில் திடீரென்று தீப்பற்றிக் கொண்டது. எலக்ட்ரிக் பைக்கில் மின்சாரம் சேமிப்பு பேட்டரி பகுதியில் தீ பரவியதைப் பார்த்த ரமேஷ் குமார் உடனடியாக பைக்கை சாலையோரம் நிறுத்திவிட்டு தப்பினார். உடனடியாக அங்கு காவல் பணியில் இருந்த போக்குவரத்து போலீசார் தீயணைப்பான் கருவி மூலம் தீ அணைப்பில் ஈடுபட்டனர். இருப்பினும் பைக் முழுவதும் தீ பற்றி கொண்டதால் உடனடியாக தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து பைக் எழுதிக் கொண்டிருந்த பைக் தீயணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர் இருப்பினும். பைக் முழுமையாக எரிந்து நாசமானது. திருத்தணியில் பொதுமக்கள் நிறைந்த சாலையில் சென்றுக் கொண்டிருந்த எலக்ட்ரிக் பைக் திடீரென்று தீப்பாற்றிக் கொண்டு எரிந்து நாசமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பைக் ஓட்டிச் சென்றவர் வாகனத்தை நிறுத்திவிட்டு விலகி சென்று விட்டதால், காயமின்று உயிர் தப்பியது குறிப்பிடத்தக்கது.