ஸ்ரீ கங்கையம்மன் கோவிலின் முதலாம் ஆண்டு தீமிதி திருவிழா!

84பார்த்தது
ஸ்ரீ கங்கையம்மன் கோவிலின் முதலாம் ஆண்டு தீமிதி திருவிழா!
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அடுத்த தாமரைப்பாக்கம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ கங்கை அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் முதலாம் ஆண்டு தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது நிகழ்ச்சியை முன்னிட்டு கடந்த மாதம் 28ஆம் தேதி தீமிதி திருவிழா தொடங்கி கங்கை அம்மனுக்கு கூழ்வார்த்தல், கரகம் ஊர்வலம், வேப்பிலை சாத்துதல், நாள்தோறும் அம்மனுக்கு பல்வேறு விதமான சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. தொடர்ந்து கணபதி ஹோமம், கிராம தேவதை பொன்னியம்மனுக்கு ஊர் கூடி பொங்கல் வைத்தல், பக்தர்களுக்கு காப்பு கட்டுதல், உள்ளிட்டவை நடைபெற்றது.

விழாவின் நிறைவு நாளான அம்மனுக்கு பால் அபிஷேகம், தீபாராதனை, கங்கையம்மனுக்கு பொங்கல் வைத்தல், சிலை எடுத்து வருதல், சிலை கிரகம் எடுத்து வருதல் உள்ளிட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் விரதம் இருந்து காப்பு கட்டிய 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் புனித நீராடி உடல் முழுவதும் சந்தனம், மலர்களால் அலங்காரத்துடன் பக்தர்கள்

ஸ்ரீ கங்கை அம்மனை புறப்பாடு நடைபெற்றது. பின்னர் கோவிலின் வளாகத்தில் அமைக்கப்பட்டு இருந்த தீ குண்டத்தில் ஒருவருக்கு பின் ஒருவர் இறங்கி தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி