ஆவடி சி ஆர் பி எப் KV பள்ளிக்கு போகும் வழியில் 500 மீட்டர் வரை சாலை குண்டும் குழியுமாக உள்ளது. கடந்த இரண்டு வருடமாக அரசு பேருந்து மற்றும் இருசக்கர வாகனங்கள் பள்ளிக்கு போகும் பிள்ளைகள் அச்சாலை வழி கடந்து போவதில் பெரும் சிரமமாக உள்ளது. எந்த ஒரு ஆட்சியரும் கண்டுகொள்ளவில்லை. பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு செல்வதில் தாமதம் ஏற்படுகிறது. இதில் பலர் விழுந்து எழுகின்றனர். மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.