பள்ளி மாணவர்கள் மனம், உடல், பாலியல் சார்ந்த துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டால் உடனடியாக புகார் அளிக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. பள்ளியில் பாலியல் தொல்லை தொடர்பாக சம்பந்தப்பட்ட நபர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை எச்சரித்துள்ளது. பாலியல் துன்புறுத்தல்கள் இருந்தால் மாணவர்கள் 14417 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். மேலும், பாதுகாப்பற்ற சூழல், தேர்வு, உயர்கல்வி தொடர்பான ஆலோசனைக்கும் இந்த இலவச எண்ணை தொடர்பு கொள்ளலாம்.