பணியின் போது அரசு ஊழியர் மயக்கமடைந்து உயிரிழப்பு

66பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே அத்திமாஞ்சேரிப்பேட்டை சேர்ந்தவர் ராஜசேகர்(59) இவர் பள்ளிப்பட்டு பேரூராட்சியில் வரி தண்டலராக பணியாற்றி வருகிறார். இரண்டு மாதங்களில் பணி ஓய்வு பெற உள்ள நிலையில், நேற்று பேரூராட்சி அலுவலகத்தில் பணியில் இருந்த போது திடீரென்று அவர் மயக்கமடைந்து கீழே விழுந்து விட்டதாகவும், அவரை அங்கிருந்த பணியாளர்கள் மீட்டு பள்ளிப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதை உறுதிப்படுத்தினர். தகவலின் பேரில் பள்ளிப்பட்டு போலீசார் இறந்தவர் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

தொடர்புடைய செய்தி