வட்டாட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகள் இல்லை பொதுமக்கள் அவதி.

72பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை மீட்பு பணி துறை சார்பில் 1433 ஆம் பசலி வருவாய் தீர்வாயத்தின் ஜமாபந்தி நடைபெற்று வருகிறது. கடந்த ஜுன் ஏழாம் தேதி தொடங்கப்பட்டு இன்று வரையில் வருவாய் தீர்வாயம் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. கடந்த இரு தினங்களாக நடைபெற்று வரும் வருவாய் தீர்வாயம் எனப்படும் ஜமாபந்தியில் வருவாய் தீர்வாய அலுவலர் எனப்படும் ஜமாபந்தி அலுவலர் இல்லாததால் உடனடி தீர்வு கிடைக்காமல் காலதாமதமானது. நேற்று பழவேற்காடு பகுதிக்கு மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு மேற்கொண்டதால் ஜமாபந்தி அலுவலர் உள்ளிட்ட அலுவலர்கள் சென்று விட்டதாகவும் அதே போன்று இன்று பழவேற்காட்டிற்கு வேறு வேலை காரணமாக சென்றுவிட்டு 12 மணி அளவில் ஜமாபந்தி அலுவலர் வருகை தந்தார். இதனால் காலை முதல் மதியம் வரை மனுதாரர்கள் காத்துக் கிடக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டனர். மேலும் உடனடி தீர்வு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பதில் தாலுக்கா அலுவலகம் முன்பு கூடியிருந்தனர். இரண்டு நாட்களாக வருவாய் தீர்வாய அலுவலர் இல்லாமல் பொதுமக்கள் வருவாய் தீர்வாய நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவதியுற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி