2வது நாளாக ரயில்வே மேம்பால சாலையை கடக்க முடியாமல் அவதி

62பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சுற்று வட்டாரங்களில் இன்று பெய்த மழையால் பொன்னேரி பழவேற்காடு சாலையில் ரயில்வே மேம்பால சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்த கனமழை காரணமாக குளம் போல் தேங்கிய மழைநீர்
வெளியேற வழியில்லாததால் சாலையை கடக்க முடியாமல் தொடர்ந்து பொதுமக்கள் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர் பாதிப்பை உணர்ந்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மற்றும் பொன்னேரி நகராட்சி நிர்வாகத்தினர் நிரந்தரமாக மேம்பாலத்துக்கு கீழே தேங்கும் மழை நீரை வெளியேற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது.
மழை பெய்யும் காலங்களில்
மேம்பாலத்திற்கு கீழே குளம் போல் தேங்கி உள்ள மழை நீரை மின் மோட்டார் மூலம் வெளியேற்ற தற்காலிகமாக நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் ஊழியர்கள் முறையாக மழை நீரை வெளியேற்றாததால் மழைநீர் தேங்கி தொடர்ந்து பாதிப்புகள் ஏற்படுவதாகவும்
பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு தற்போது வரை ஏற்படுத்தவில்லை எனவும் லேசான மழைக்கும் பொன்னேரி சாலைகளில் மழைநீர் சூழ்ந்து தொடர்ந்து பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாவதாகவும் மழை நீரை வெளியேற்ற முறையாக மழைநீர் கால்வாயை அமைக்க வேண்டும் எனவும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாகவும்
பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி