தொடர் மின்வெட்டால் பொதுமக்கள் போராட்டம்

60பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நகராட்சிக்கு உட்பட்ட சின்னகாவனம் பெரியகாவனம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் தொடர்ந்து அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் பொதுமக்கள் பல்வேறு சிரமத்திற்கு ஆளாகி வந்த நிலையில் இதுகுறித்து மின்வாரிய அலுவலகத்திற்கு புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் தொடர்ந்து அலட்சியம் காட்டுவதாகவும்
இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் பொன்னேரி துணை மின் நிலைய செயற்பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு
அலுவலகம் முன்பாக அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மின்வாரிய அதிகாரிகள் போதிய
பணியாளர்கள் இல்லை மின் உபகரணங்கள் இல்லை என கூறுவதாகவும்
பணம் கொடுத்தால் மட்டுமே பணி செய்ய வருவதாகவும் பொதுமக்கள் குற்றம்
சாட்டினர் தொடர்ந்து சீராக மின் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் மின்வாரிய செயற்பொறியாளர் உதயகுமார் சமரசம் மேற்கொள்ள வராததால் பொதுமக்கள் தொடர்ந்து இரண்டு மணி நேரத்திற்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் நகர் மன்ற தலைவர் டாக்டர் பரிமளம் விஸ்வநாதன் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் சமரசம் மேற்கண்டையில் தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டனர்
மின்தடையை நிரந்தரமாக போக்க நடவடிக்கை எடுக்காவிட்டால்
அடுத்த கட்டமாக பல்வேறு போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் அவர்கள்
தெரிவித்தனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி