24, 25ஆம் தேதிகளில் நாடு முழுவதும் நடைபெறவிருந்த வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. டெல்லியில் மத்திய அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்ட நிலையில் இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஒப்பந்த மற்றும் தற்காலிக பணியாளர்களை நிரந்தரமாக்க வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், 5 நாள் வங்கி வேலைநாள் முறையை கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்தது.