பாலியல் கல்வியை கட்டாய பாடமாக்கி வாரத்திற்கு 2 வகுப்புகள் வீதம் நடத்த கர்நாடக அரசு தீர்மானித்துள்ளது. 8 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு பாலியல் கல்வி கட்டாய பாடமாக்கப்படும். மருத்துவர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மாணவர்களுக்கு விழிப்புணர்வு வகுப்பு எடுப்பார்கள். ஆண்டுக்கு இருமுறை, அனைத்து மாணவர்களுக்கும் சுகாதாரப் பரிசோதனை செய்யப்படும். மேலும், பெண் குழந்தைகளின் பிரச்னைகளைக் கேட்கவும், பரிசீலிக்கவும் ஒரு பெண் ஆசிரியர் பிரத்யேகமாக நியமிக்கப்படுவார் என கூறப்பட்டுள்ளது.